நான் எந்தக் கடவுளை வணங்கினாலும் முருகா, கந்தா, கடம்பா, சண்முகா, ஞானப்பண்டிதா என்றுதான் என் மனமும், உதடும் உச்சரிக்கின்றது. இது தவறாகுமா? 

தவறாகாது. பரம்பொருள் ஒன்றுதான். இந்தத் தத்துவத்தைப் புரிந்துக்கொண்டால் பல தெய்வங்கள் என்ற குழப்பம் வராது. நாயன்மார்கள் காலத்தில் விநாயகர், முருகன், திருமால், சக்தி வழிபாடுகள் இருந்தன. ஆனாலும் அடியார்கள், 'நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே' என்பதே தாரக மந்திராக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு இறையருள் கிட்டியது. முக்தியும் பெற்றார்கள். உங்கள் சிந்நனைக்கு முருகப்பெருமான் பரம்பொருளாகக் காட்சி கொடுப்பதால் தாராளமாகக் கலியுகக் கந்தனை தொழுது, கந்தனின் திருப்புகழைப் பாடி, ஓதி எல்லாச் சிறப்புகளையும் பெறவும் என்று வேண்டிக் கொள்கிறோம்.