top of page
குழந்தைகளுக்கு தெய்வப்பெயர்களைச் சூட்டுவது நன்மையைத் தருமா?
பதில்:
கண்டிப்பாக நன்மையை மட்டுமல்ல பெரிய புண்ணியத்தையும் தரும். இந்த நவநாகரிக காலத்தில் எத்தனைப் பேர் இறைவனை நினைக்க முடிகிறது. அவனது நாமத்தைப் பாட முடிகிறது. சொல்லத்தான் முடிகறது. இதைக் கருத்தில் கொண்டுதான் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு இறைவன் நாமத்தைச் சூட்டினார்கள். குழந்தையைப் பேர் சொல்லிக் கூப்பிடும்போது இறைவனைக் கூப்பிடுவது போல் இருக்கும், தெய்வத்தின் பெயரை உச்சரித்தது போல் இருக்கும் என்று காரணக் காரியத்தோடு பெயர் சூட்டினார்கள். ஒவ்வொரு இந்துப் பெயர்களிலும் இறைநாமம் கலந்திருப்பதில் தாம் பெருமைப்பட வேண்டும். 'நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே’ என்று இறைநாமத்தைச் சொல்லி பழகினால் ஒழிய, அவ்வளவு எளிதாக வராது. இறைவனின் பெயரைக் கிண்டல் செய்யும் ஞானசூனியங்களைப் பேச தமக்கு நேரம்கடையாது.
bottom of page